புறக்கோட்டையில் பாரிய தீவிபத்து!

Thursday, July 21st, 2016

கொழும்பு புறக்கோட்டை ஹொல்கொட் மாவத்தை பகுதியில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வர்த்தக நிலையமொன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தீ ஏனைய வர்த்தக நிலையங்களுக்கும் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்தால் குறித்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதோடு கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

Related posts: