புர்கா ஆடைகள் குறித்து அமைச்சரவையில் முக்கிய தீர்மானம்!

இஸ்லாமியப் பெண்கள் அணியும் புர்கா ஆடைகளை நிரந்தரமாக தடை செய்யக் கோரும் அமைச்சரவைப் பத்திரம் ஒன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள இதற்கான பத்திரத்தைக் கையளித்துள்ள நிலையில், அடுத்த கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலையடுத்து முகம் மூடும் வகையிலான ஆடைகள் அணிவதற்கு தடை விதிப்பதாக தெரிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குறித்த தடையை தற்போது நிரந்தரமாக்கும் முயற்சியின் அடிப்படையாக இவ் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஏப்ரலில் மிக குறைவான மழை வீழ்ச்சி! – வளிமண்டலவியல் திணைக்களம்
நிரந்தர நியமனம் கோரி தொண்டர் ஆசிரியர்கள் உண்ணாவிரதம்!
உயர்தரப் பரீட்சை மீள் பரிசீலனை பெறுபேறுகள் வெளியாகவுள்ளது!
|
|