புர்காவுக்கு வருகிறது தடை !

Saturday, March 13th, 2021

நாட்டில் புர்காவை தடை செய்வது தொடர்பான யோசனையொன்று எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த ரேரணையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கையொப்பம் இட்டுள்ளதாக அவ்வமைச்சின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஏப்ரல் – 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழு, புர்காவை தடை செய்யுமாறு பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, 2019 இல் இடம்பெற்ற ஏப்ரல்-21 தாக்குதலின் பின்னர் உடன் அமுலாகும் வகையில் புர்காவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே நாட்டில் புர்காவை தடை செய்வது தொடர்பான யோசனையொன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: