புரிந்துணர்வுகள் மூலமாக முன்னோக்கிச் செல்வோம் – யாழ். பல்கலையில் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்!

Saturday, February 27th, 2021

ஒருமித்த புரிந்துணர்வுகள் மூலம் எமது செயற்பாடுகளை முன்னோக்கிச் செயற்படுத்துவோம் என தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் யாழ்.கலையில் கல்வி பயிலும் பதினொராயிரம் மாணவர்களில் நான்காயிரத்து 500 சிங்கள மாணவர்கள் கற்பதுடன், அவர்களுக்கும் வட பகுதி மாணவர்களுக்கும் இடையில் புரிந்துணர்வுகள் ஏற்படும் சிறந்த களமாக உள்ளது எனவும்  எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இடம்பெறும் நிலையில் இன்றையதினம் அங்கு சென்றிருந்த இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியதோடு பேரவை உறுப்பினர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்துகொண்டார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்துக் கூறுகையில் – நான் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த காலத்தில் பல்வேறு வேலைத் திட்டங்களின் போது யாழ். மக்களுடன் தொடர்புகளைப் பேணி வந்துள்ளதாக தெரிவித்த அவர். மத்திய வங்கியின் வடக்கு அலுவலகம் உட்பட ஏனைய வங்கியின் அலுவலங்கள் தொடர்பாக பல நிகழ்வுகளில் கலந்து கொண்டுடதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இன்றையதினம் நான் வருகை தந்தபோது பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஒரு விடயத்தைத் தெரியப்படுத்தினார். யாழ். பல்கலைக்கழகத்தில் 11 ஆயிரம் மாணவர்கள் பட்டப்படிப்பை மேற்கொள்கின்றார்கள் எனவும் அதில், நான்காயிரத்து 500 பேர் தென் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று.

தென் பகுதி, வட பகுதி மாணவர்கள் ஒன்றாகக் கல்வி கற்பதன் காரணமாக சில புரிந்துணர்வுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. எனவே, இது மிகவும் முக்கியமான விடயமாகும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதேநேரம் எமது அரசாங்கத்தின் நோக்கம் பொருளாதாரத்தை முன்னோக்கின் கொண்டுசென்று முதலீடுகளை அதிகரிப்பதாகும். அத்துடன் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டுவந்த முதலீட்டு செயற்பாடுகள் தொடர்பாக நாம் அதிக அக்கறை செலுத்தி வருகின்றோம்.

அத்தோடு வடக்கில் பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்கள், வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன. யாழ். பல்கலைக்கழகத்திலும் புதிய கட்டடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மாணவர்களுக்குரிய வசதி, வாய்ப்புகள் ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு உள்ளதுபோன்றே, ஒரே மாதிரியாகவே வழங்கப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டியிரந்த அமைச்சர் புரிந்துணர்வுகள் மூலமும் தெளிவுபடுத்தல் மூலமும் எமது செயற்பாடுகளை முன்னோக்கிச் செயற்படுத்துவோம் என்று தெரிவித்திருந்தமை குறிப்பித்தக்கது.

000

Related posts: