புரவி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் உடனடி உதவிகள் வழங்கிவைப்பு!
Friday, December 4th, 2020புரவி சூறாவளி இலங்கையை கடக்கும்போது பெய்த கடும் மழை மற்றும் காற்று காரணமாக யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் புரவி புயல் ஏற்படுத்திய தாக்கங்களில் இருந்து மக்களை மீட்டெடுங்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சரருமான டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தொடக்கம் குறித்த நடவடிக்கைகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக யாழ் குடாநாட்டின் வலிகாமம், யாழ்ப்பாணம், தீவகம், நல்லூர், வடமராட்சி மற்றும் தென்மராட்சி உள்ளிட்ட பிரதேசங்களின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் தேங்கி நிற்பதால் மக்கள் பெரும் அவலங்களை கண்டுவருகின்றனர்.
அத்துடன் கிளிநொச்சி வவுனியா மன்னார் முல்லைத்தீவு ஆகிய வற்றுடன் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை உள்ளிட்ட ஏனைய மாவட்டத்திலும் அதிகளவான மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்
இந்நிலையில் பாதிப்புகள் தொடர்பில் அம்மாவட்டங்களின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அமைப்பாளர்கள் பிரதச பொறுப்பாளர்கள் தலைமையில் நேரில் சென்று பார்வையிட்டு பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்களது தேவைப்பாடுகளையும் அவரச உதவிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்
குறிபாக பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள மக்களின் அத்தியாவசிய தேவைகளுடன் அவர்களுக்கான உணவுப் பொதிகளையும் உலருணவு பொதிகளையும் வழங்கிவரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் சொத்துக்களுக்குமான இழப்பீடுகளை பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|