புரநெகும வேலைத்திட்டத்தின் 3ஆம் கட்டம் விரைவில் ஆரம்பம் – ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ!

Saturday, March 27th, 2021

உலக வங்கியின் உதவியுடன் செயற்படுத்தப்பட்டு வரும் ‘புர நெகும’ திட்டத்தின் மூன்றாம் கட்டம் விரைவில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ இதன் மூலம் உள்ளூராட்சி நிறுவனங்களின் பல குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு தேவையான கனரக வாகனங்கள் உள்ளிட்ட இயந்திரங்கள் இல்லாததால் உருவாகியிருக்கும் பிரச்சினைக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு காணப்படும் என்றும் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதேநேரம் சமூக சங்கங்களுக்கு வழங்கப்படும் நிதியையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பசில் ராஜபக்ஷ இதன்போது மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: