புனர்வாழ்வு பணியக சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு 17 வாக்குகளால் நிறைவேறியது ஆதரவாக 23 – எதிராக 06 வாக்குள் பதிவு!

Thursday, January 19th, 2023

புனர்வாழ்வு பணியக சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு பாராளுமன்றத்தில் நேற்று 17 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

சட்ட மூலம் நேற்று சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது சட்டமூலத்துக்கு  ஆதரவாக 23வாக்குகளும் எதிராக 6 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

பாராளுமன்றத்தில் நேற்று புனர்வாழ்வு பணியக சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் முழு நாள் விவாதமாக நடைபெற்றது. விவாதத்தின் இறுதியில் சட்டமூலத்துக்கு சபை அனுமதி அளிக்கின்றதா என சபைக்கு தலைமைதாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ சபையை வினவியபோது சபையில் தேசிய மக்கள் சக்தி எம் பி விஜித ஹேரத் வாக்களிப்பு கோரினார்.

அதற்கமைய வாக்களிப்பு இடம்பெற்றபோது ஆளும் கட்சியில் இருந்த 22 உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சி தரப்பில் சுயாதீன உறுப்பினரான ஏ,எல்.எம். அதாவுல்லாவும் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தார். அதன் மூலம் சட்டமூலத்துக்கு ஆதரவாக 23வாக்குகள் அளிக்கப்பட்டன.

அத்துடன் எதிர்க்கட்சியில் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிக்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, இரான் விக்ரமரத்ன, அனுகுமார திஸாநாயக்க, விஜித ஹேரத் மற்றும் ஹரினி அமரசூரிய ஆகியோர் எதிர்த்து வாக்களித்தனர்.

அதன்படி சட்டமூலத்துக்கு எதிராக 6வாக்குகள் அளிக்கப்பட்டன. அதற்கிணங்க புனர்வாழ்வு பணியக சட்டமூல இரண்டாம் மதிப்பீடு 17 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் சபையில் நிறைவேற்றப்பட்டது

Related posts: