புனரமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கு நாளை திறப்பு!

Friday, June 17th, 2016

நவீன வசதிகளுடன் மீள்புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கு விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டுக்காக நாளையதினம் கையளிக்கப்படவுள்ளது.

இந்திய அரசின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்ட மைதான மீள்புனரமைப்பு பணிகள் நிறைவடைந்தள்ள நிலையில் நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நேரிலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொளியூடாகவும் இந்த மைதானத்தை  விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கவுள்ளனர்

மைதானத்தை சூழவும் இலங்கை இந்தியக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ள அதேவேளை நிகழ்வுக்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்ட வருகின்றன.

அரங்கின் நவீன வசதிகளாக மைதானத்தின் புற்றரை இரவு நேரங்களிலும் போட்டிகளை நடத்தக்கூடியவகையில் மின்னொளி வசதி விருந்தினர்கள் போட்டிகளை கண்டுகளிக்க விசேட அரங்குஇ பார்வையாளர்களுக்கான அரங்கு மைதானத்தின் நீர்வடிகாலமைப்பு உள்ளிட்ட பல்வேறு நவீன வசதி வாய்ப்புகளை கொண்டமைந்த வகையில் இம் மைதானம் மீள்புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இம்மைதானம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கோரிக்கையின் அடிப்படையில் இந்திய அரசின் உதவியுடன் நவீன வசதிகளை கொண்டமைந்த வகையில் மீள்புனரமைப்பு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 1

3

2

111

222

Related posts: