புத்திஜீவிகளின் ஆலோசனையின்றியே இம்முறை பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு!

Wednesday, July 5th, 2017

புத்திஜீவிகள் குழுவின் எந்தவித ஆலோசனையும் பெற்றுக்கொள்ளாமலேயே பேருந்து கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜவர்த்தன குற்றம்சுமத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசு மேற்கொண்ட பேரூந்துக் கட்டண அதிகரிப்புக்க எதிராக பயணிகள் சட்ட நடவடிக்கை எடுக்க முடியமாக இருப்பினும், அவர்கள் அவ்வாறான நடவடிக்கைக்குச் செல்லாது தவிர்ந்து கொள்கின்றனர். தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இம்முறை பேரூந்துக் கட்டணத்தை 6.28 வீதத்தால் அதிகரித்தது. இந்த அதிகரிப்ப நியாயமான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரி பயணிகளுக்கோ அல்லது பேறு தரப்பினருக்கோ நீதிமன்றம் செல்ல முடியும். தற்போது அந்தத் தேவை எழுந்துள்ளது.

பொக்குவரத்து அணைக்குழு எதனையும் சரியாகச் செய்வதில்லை. திலுட்டுத் தனமாக போக்குவரத்து அனுமதிப் பத்திரத்தை மாத்திலம் ஒழுங்கோ விநியோகித்து வருகின்றது. இந்தக் கட்டணம் தொடர்பாக ஏற்படுத்தப்பட்டு;ள சூத்திர முறை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் இந்த முறைமை 2018 ஆம் ஆண்டு எந்த விதத்திலும் செயற்பாட்டுக்கு வரக்கூடாது. இந்தக் கட்டண அதிகரிப்பு பேரூந்து சாரதிகளுக்கும், நடத்துனர்களுக்குமே சிறந்தது.

அடுத்த வருடத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டு கட்டணம் சிலோ மீற்றர் அடிப்படையில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

Related posts: