புத்திஜீவிகளின் அமைதி தான் நாட்டின் அபிவிருத்திக்கு தடை -ஜனாதிபதி!

நாட்டிலுள்ள கல்விமான்களும் புத்திஜீவிகளும் பல விடயங்களை அரசியல்வாதிகளின் பொறுப்பாகக் கருதி அமைதி காப்பது நாட்டின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் தடையாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
வெலிகம நகர மண்டபத்தில் இடம்பெற்ற தென் மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.
சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலமான பட்டதாரிகள் 1250 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வை அடையாளப்படுத்தும் வகையில் சிலருக்கு ஜனாதிபதி நியமனக் கடிதங்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டில் கல்விமான்களும் புத்திஜீவிகளும் தாய்நாட்டிற்காக பாரிய பணிகளை நிறைவேற்ற முடியும் என்பதோடு தாமதமின்றி அனைவரும் அதற்காக ஒன்றிணைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஆசிரியர் சேவையில் ஈடுபட்டுள்ள அனைவரும் நிறைவேற்றும் செயற்பணிகளை இதன்போது பாராட்டிய ஜனாதிபதி, சமூகத்தில் சிறந்த பிரஜைகளை உருவாக்குவதற்காக அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடமைகளையும் தெளிவுபடுத்தினார்.
Related posts:
|
|