புத்தாண்டை முன்னிட்டு விஷேட நடவடிக்கை!

Friday, March 31st, 2017

புத்தாண்டை முன்னிட்டு உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை விஷேட சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவின் ஆலோசனைப்படி மக்களுக்கு தரமான மற்றும் சுத்தமான உணவுகளை வழங்கும் நோக்கில் குறித்த இந்தப் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த திட்டத்தின் கீழ் புறக்கோட்டை மற்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள மொத்த விற்பனை களஞ்சியசாலைகள் சோதனை செய்யப்பட உள்ளதுடன், நீண்டதூர சேவையில் ஈடுபடும் பஸ்கள் நிறுத்துமிடங்களில் உள்ள சிற்றுண்டிச்சாலைகளும் சோதனை செய்யப்பட உள்ளன.

இது தவிர வெசக் மற்றும் பொசன் பண்டிகை காலத்தில் மே மாதம் 02ம் திகதி முதல் உணவு பாதுகாப்பு வாரம் ஒன்றை அமுல்படுத்துமாறு அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: