புத்தாண்டை முன்னிட்டு இன்றுமுதல் விசேட பொதுப் போக்கவரத்து சேவைகள் முன்னெடுப்பு – போக்குவரத்துச் சபை அறிவிப்பு!

Friday, April 8th, 2022

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பவுள்ள பொதுமக்களுக்காக, நடைமுறைப்படுத்தப்படுகின்ற, தூரப்பிரதேசங்களுக்கான விசேட பேருந்து சேவை, இன்று ஆரம்பிக்கப்படுவதாக போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

வழமையாக சேவையில் ஈடுபடும் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துகளுக்கு மேலதிகமாக, இந்தப் பேருந்துகள் சேவையில் ஈடுபட உள்ளதாக கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதற்காக, மேலதிகமாக 1,000 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. எவ்வாறிருப்பினும், போதுமான அளவு டீசல் கிடைக்காவிட்டால், எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில், தூரப்பிரதேசங்களுக்கு சேவையில், தனியார் பேருந்துகள் ஈடுபட மாட்டாதென இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தூர மற்றும் விசேட தொடருந்து சேவைகளை நடத்த தொடருந்து திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இதன்படி பொதுமக்களின் நலன்கருதி, இன்று (8) முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை, விசேட தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: