புத்தாண்டை கொண்டாட வேண்டாம் என்று நாம் கூறவில்லை – இராணுவத் தளபதி !

புத்தாண்டை கொண்டாட வேண்டாம் என்று நாம் கூறவில்லை என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையத்தினால் தற்போது நாட்டில் காணப்படுகின்ற கொவிட் நிலைமைகளை மதிப்பீடு செய்து புத்தாண்டில் முன்னெடுக்கப்படக் கூடிய நடைமுறைகளை சுகாதார அமைச்சிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டை கொண்டாட வேண்டாம் என்று நாம் கூறவில்லை. எனினும் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய கட்டுப்பாடுகளுடன் குடும்ப அங்கத்தவர்களுடன் மாத்திரம் இணைந்து கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்று குறிப்பிட்டார்.
Related posts:
வெளிநாட்டிலிருந்து வரும் பொதிகள் பரிசோதிக்கப்படும் - தபால் திணைக்களம்!
அடுத்த மாதம் முதல் LED மின்குமிழ் இலவசம்!
அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவராக சந்திரசேகரம்!
|
|