புத்தாண்டு   விபத்துக்கள் : 185 பேர் மருத்துவமனையில்!

Friday, April 14th, 2017

கடந்த 24 மணித்தியாளங்களுக்குள் திடீர் விபத்துக்கள் காரணமாக 185 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு தேசிய மருத்துவமனை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, புதுவருடத்தை முன்னிட்டு வாகன செலுத்துனர்களை விபத்துக்கள் ஏற்படாதவாறு அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது. வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. அதிவேக பாதைகளை பயன்படுத்துபவர்கள், வீதி ஒழுங்குகளை கடைப்பிடித்து வேக கட்டுப்பாட்டுடன் வாகனங்களை செல்லுமாறு வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மருத்துவர் சிசிர கோதாகொட கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts: