புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பில் இறுதி முடிவு அடுத்த வாரம் – – இராணுவத்தளபதி அறிவிப்பு!

Monday, March 29th, 2021

நாட்டின் தற்போதைய கொரோனா தொற்றின் பரவல் நிலையை கருத்திற்கொண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்தலாமா, இல்லையா என்பது குறித்த இறுதி முடிவு அடுத்த வாரம் எடுக்கப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்துவதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் நியதிகளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு கோவிட் 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல் மையம் பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது என்றும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே வரவிருக்கும் புத்தாண்டு பண்டிகை காலங்களில் பொதுமக்களின் பயணத்தை முடிந்தவரை தடைசெய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: