புத்தாண்டு காலத்தில் அவதானமாக இருங்கள் – பொரோனா தொடர்பில் சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Wednesday, April 6th, 2022

கடந்த வருடம் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருந்தது. 

இதன் காரணமாக இம்முறை புத்தாண்டு காலத்தில் அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என சுகாதார அமைச்சு  எச்சரிக்கை விடுத்துள்ளது. 

புத்தாண்டு காலத்தில் இடம்பெறும் முக்கிய நடவடிக்கைகளின் போது பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கிடையில், நேற்று முதல் நாட்டில் கோவிட் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: