புத்தாண்டுக்கு 27 இலட்சம் முட்டைகள் இறக்குமதியாகும் – உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு !!

Wednesday, March 14th, 2018

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 27 இலட்சம் முட்டைகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு கைத்தெழில் மற்றும் வணிக அமைச்சு திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது .

இந்தியா  தாய்லாந்து உட்பட மேலும் சில ஆசிய நாடுகளில் இருந்தே முட்டைகள் இறக்குமதி செய்வதில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது .இம் முட்டைகளை தனியார் வியாபரிகள் ஊடாக இறக்குமதி செய்யவுள்ளதாகவும் தகவல்கள் தெரியவருகின்றது

தற்போது நாட்டில் முட்டைக்கு தன்நிறைவு (மேலதிகமாக) இருக்கின்ற போது இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு முயற்சி செய்வதற்கு இந் நாட்டின் முட்டை உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

முட்டைகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது தொடர்பான தீர்மானத்தை அமைச்சு கைவிட வேண்டும் . இல்லையேல் எதிர்வரும் வாரங்களில் முட்டை உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்

Related posts: