புத்தாண்டுக்கான ஒற்றுமை வலுப்படுத்தி இலங்கை வந்தடைந்த ‘ரன்விஜய்’ கப்பல்!

Thursday, April 15th, 2021

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ராஜ்புத் வகுப்பின் 5 ஆவது கப்பலான ரன்விஜய் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது

இலங்கை மக்களின் புத்தாண்டுக்கான ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமை செய்தியுடன் ரன்விஜய் கப்பல் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளது.

இந்த கப்பல் இந்திய கடற்படைக்கு சொந்தமான பிரபல கப்பலாக கருதப்படுவதுடன் நீர்மூழ்கி மற்றும் ஏவுகணை எதிர்ப்பு கட்டமைப்புகளையும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கப்பலின் கப்டனாக நாராயணன் ஹரிஹரன் கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: