புத்தாண்டின் வரவு புதுப் பொலிவை தரவேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் V.K.ஜெகன்!

Tuesday, January 1st, 2019

புதிதாக பிறந்துவரும் புத்தாண்டிலாவது மாற்றங்கள் நிகழும் என்ற நம்பிக்கையுடன் கடந்து சென்ற ஆண்டுகளை நாம்; வரவேற்றிருக்கின்றோம். அனால் அவை மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துச் சென்ற ஆண்டுகளாகவே கடந்து சென்றுள்ளன. ஆனால் பிறக்கின்ற இந்த 2019 ஆண்டிலாவது எமது மக்களின் அபிலாஷைகள் வெற்றிகொள்ளப்படும் என்ற நம்பிக்கையுடன் இந்த புத்தாண்டை நாம் வரவேற்போம்  என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் தெரிவித்துள்ளார்

புதுவருடப் பிறப்பை முன்னிட்டு அவர் வெளியிட்டனள்ள வாழ்த்தச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கடந்து சென்ற ஒவ்வொரு வருடங்களையும் எமது மக்கள் தமது வாழ்வியலுக்கான தேடல்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வரவேற்றிருந்தார்கள். ஆனால் அந்த ஆண்டுகள் ஒவ்வொன்றும் எமது மக்களுக்கு ஏமாற்றங்களை மட்டுமே கொடுத்துச் சென்றிருந்தன.

ஏமாற்றங்களே வாழ்க்கையாக இருக்கும் எமது மக்கள் தமது எதிர்காலத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் சிறந்த தலைவர்களை இனங்கண்டு அவர்களூடாக தமது எதிர்கால வாழ்வியலை வென்றெடுக்கும் வழிமுறைகளை இந்த ஆண்டிலாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே  எமது விருப்பாகும்.

அந்தவகையில் பிறக்கின்ற இந்த புத்தண்டு உங்கள் ஒவ்வொருவருக்கம் மாற்றங்களை கொண்டுவரும் புத்தாண்டாக அமைந்து புதுப் பொலிவை தரும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் அனைவருக்கும் புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்தக் கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: