புத்தாண்டின் பின்னர் அனைத்து பல்கலைக்கழகங்களும் திறக்கப்படும் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Monday, April 12th, 2021

அனைத்துப் பல்கலைக்கழகங்களும் புத்தாண்டின் பின்னர் மீண்டும் திறக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பது தொடர்பான விசேட சுற்றறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தற்போது தயாரித்து வருகின்றார் என்றும் இந்த ஆலோசனைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதேநேரம் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு கொரோனா வைரசுக்கான தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்னர் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.

மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு வருவதை தாமதப்படுத்த முடியாது என்பதால் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: