புத்தாண்டன்று மின்சாரம் தடைப்படாது – அமைச்சர் ரவி கருணாநாயக்க!
Sunday, March 31st, 2019எதிர்வரும் தமிழ், சிங்கள புதுவருடப் பிறப்பு கொண்டாடப்படும் காலத்தில் மின்சார விநியோகம் துண்டிக்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு மற்றும் மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் ரவி கருணாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
வெசாக் பண்டிகைக் காலத்தில் மின்சார விநியோகம் துண்டிக்கப்படாதிருப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சுற்றுலாப் பயணிகள் மூலம் 43 மில்லியன் வருமானம்!
குடாநாட்டில் 23 நாட்களில் 291 பேருக்கு டெங்கு தொற்று!
மேட்டு நிலப் பயிர்ச் செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளது - தோட்டச் செய்கையாளர்கள் கவலை! .
|
|