புத்தக விற்பனையகங்களை திறக்க தேவையான சுகாதார பரிந்துரைகளை வழங்குங்கள் – சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்திடம் பொலிஸ் மா அதிபர் கோரிக்கை!

Wednesday, September 22nd, 2021

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், சுகாதார நடைமுறைகளுக்கு அமைய, புத்தக விற்பனையகங்களை மீள திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான பரிந்துரைகளை வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் சீ.டி விக்ரமரட்ன, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் சமந்த இந்திவர சமரசிங்க பொலிஸ் மா அதிபரிக்கு எழுத்து மூல கோரிக்கையினை விடுத்திருந்தார்.

ஒருவருடத்திற்கு மேலாக புத்தக விற்பனையகங்கள் மூடப்பட்டுள்ளதால் பொருளாதார ரீதியில் தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், அத்தியாவசிய புத்தகங்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காரணிகளை கருத்திற்கொண்டு புத்தக விற்பனையகங்களை மீள திறப்பதற்கு தேவையான பரிந்துரைகளை வழங்குமாறு சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்திடம் பொலிஸ் மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: