புதுவருட மரநடுகைக்காக நாற்றுமேடை தயாரிப்பதில் அரச அலுவலகங்கள் ஆர்வம்!
Sunday, December 16th, 20182019 ஆம் ஆண்டு புதுவருடப் பிறப்பின் புண்ணிய காலத்தில் நாடு முழுவதும் மரக்கன்றுகளை நடும் திட்டம் இடம்பெறவுள்ளது.
அதற்காக அரச திணைக்களங்கள் அனைத்தினதும் வளாகங்களில் நாற்றுமேடைகளை அமைக்குமாறு வடக்கு மாகாண தலைமைச் செயலர் அ.பத்திநாதன் அறிவித்துள்ளார்.
அரச தலைவரின் ஆலோசனைக்கமைய நாட்டின் பேண்தகு வனப் பரம்பலை மொத்த நிலப்பரப்பில் 32 வீதமாக அதிகரிப்பதற்கான இலங்கை நிவர்த்தி செய்யும் நோக்குடன் வனமாக்கல் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. அதற்கு இணையாக மரநடுகைச் செயற்றிட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. எதிர்வரும் ஜனவரியில் புதுவருடப் பிறப்பின் புண்ணிய காலத்தில் மரநடுகைக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அன்றைய புண்ணிய கால சுப நேரத்தில் மரக்கன்றுகளை அனைவரும் நடவேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. எனவே தத்தமது நிறுவன அலுவலர்களுக்கும் சமூகத்தினருக்கும் தேவையான மரக்கன்றுகளை வழங்கக்கூடிய வகையில் அனைத்துப் பாடசாலைகள், வேலைத்தளங்கள், அரச மற்றும் இடைநிலை அரச நிறுவனங்களில் நாற்று மேடைகளை அமைத்துப் பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2019 வனமாக்கல் செயற்றிட்டத்தை மேற்கொள்வதை உறுதிப்படுத்தும் வகையில் குறித்த செயற்றிட்டங்களை வருடாந்த திட்ட வரைபில் உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மாகாண தலைமைச் செயலர் அரச அலுவலகங்களுக்கு அறிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் நவம்பர் மாதத்தை மரநடுகை மாதமாக வடக்கு மாகாணசபை அறிவித்திருக்கிறது. நவம்பரிலும் ஏராளமானோர் மரங்கள் நடுகை செய்கின்றனர்.
Related posts:
|
|