புதுவருட கொண்டாட்டத்தின் போது சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறு வலியுறுத்தல்!

Sunday, March 21st, 2021

புதுவருட கொண்டாட்டத்திற்காக தயாராகும் போது உரிய சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு பொலிஸார், பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

அடுத்த சில வாரங்களில் தமிழ் – சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு கொள்வனவுகளில் ஈடுபடுவோரை மிக அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

அனைத்து விற்பனை நிலைய உரிமையாளர்கள், முகாமையாளர்கள் சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்ப ஸ்தாபனத்தை நடத்திச் செல்லவேண்டும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்

Related posts: