புதுவருடத்தை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளம் இன்று!

ஏப்ரல் மாதத்திற்கான அரச ஊழியர்களின் சம்பளம் இன்றையதினம் செலுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் பிரதிச் செயலாளர் பிறியந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஏப்பிரல் மாதத்திற்கான அரச ஊழியர்களின் சம்பளத்தையும் பண்டிகை முற்கொடுப்பனவையும் செலுத்துவதற்காக 9 ஆயிரத்து 750 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் பிரதிச் செயலாளர் கூறியுள்ளார்.
ஏப்பிரல் மாத ஓய்வூதியத்தைச் செலுத்துவதற்காக திறைசேரி 2 ஆயிரத்து 500 கோடி ரூபா ஒதுக்கியுள்ளது. சமுர்த்திக் கொடுப்பனவை வழங்குவதற்குத் தேவையான 550 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதிச் செயலாளர் பிறியந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள்!
தலைக்கவசம் தொடர்பான வர்த்தமானி தற்காலிகமாக இரத்தானது!
சீனி அதிகமாக உள்ள பானங்களால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் – எச்சரிக்கும் ஆய்வாளர்கள்!
|
|