புதுவருடத்தை முன்னிட்டு முக்கிய நகரங்களுக்கு விசேட பாதுகாப்பு!

Monday, April 3rd, 2017

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடவும், எதுவித அசாம்பாவிதங்களும் இடம்பெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பண்டிகை காலம் என்பதால் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக அதிகமான மக்கள் நகரங்களுக்கு வருகை தருவர். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இவ்வாறு பொலிஸ் கடமையில் ஈடுப்படுத்தப்படவுள்ளனர்.

Related posts: