புதுப்பித்தல் காரணமாக கட்டுநாயக விமான நிலைய பயண நேரங்களில் மாற்றம்!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புதுப்பித்தல் பணிகள் காரணமாக ஶ்ரீலங்கன் விமான சேவை அதன் பயண நேர அட்டவணையில் மாற்றம் செய்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வரை மூன்று மாத காலப்பகுதிக்கு விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதை நாளொன்றுக்கு 8 மணிநேரம் மூடப்படவுள்ளது. இந்நிலையில், சிங்கப்பூர், சென்னை, திருச்சி, மாலே, கொச்சின் மற்றும் பெங்களூர் நோக்கி பயணிக்கும் விமானங்களின் பயண அமர்வுகளை ரத்துச்செய்யவுள்ளதாக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
அத்துடன், பீஜிங், ஷாங்காய், புதுடில்லி, லண்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட மேலும் சில நாடுகளுக்கு பயணிக்கும் விமானங்களின் நேர அட்டவணையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, இரத்துச்செய்யப்படும் விமான பயண அமர்வுகளுக்காக பிற நேரங்களில் விமானங்களை ஈடுபடுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
|
|