புதுச்சேரியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விரைவில் கப்பல் போக்குவரத்து – இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர்!

Wednesday, February 19th, 2020

புதுச்சேரியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விரைவில் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என்று இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

மதுரைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தபோது இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முதற்கட்டமாக புதுச்சேரியிலிருந்து, யாழ்ப்பாணத்துக்கு கப்பல் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படும்.

அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

Related posts: