புதிய வைரஸ் திரிபு தொடர்பான பரிசோதனை அறிக்கை இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் – ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவிப்பு!

Saturday, June 5th, 2021

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பெறப்பட்ட 96 மரபணு மாதிரிகளை பயன்படுத்தி கொவிட்-19 வைரஸ் தொற்றின் புதிய திரிபு தொடர்பான பரிசோதனை முன்னெடுக்கப்படுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து குறித்த பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர மேலும் கூறுகையில் –

நாட்டில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொவிட் தொற்றுக்கு மத்தியில் புதிய திரிபுடைய வைரஸ் தொற்று குறித்த ஆய்வொன்றை எமது பல்கலைக்கழகம் ஆரம்பித்துள்ளது. எனவே எதிர்வரும் இரண்டு வாரங்களில் இது தொடர்பான அறிக்கை சுகாதார அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தகக்து

Related posts: