புதிய வெளிநாட்டு இராஜதந்திரிகள் நியமனம்!

Thursday, April 12th, 2018

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 5 இராஜதந்திரிகள் ஜனாதிபதி செயலகத்தில்  வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமது நியமனக்கடிதங்களை கையளித்துள்ளனர்.

ஆஸ்திரியா, மொராக்கோ, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், போலந்து மற்றும் தன்சானியா ஆகிய நாடுகளுக்கான தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ ஆகியோர் கலந்து கொண்டிருந்ததாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது

Related posts: