புதிய வீதி வரைபடம் 29 ஆம் திகதி வெளியீடு – நில அளவையாளர் திணைக்களம்!
Monday, January 20th, 2020இலங்கையின் புதிய வீதி வரைபடம் எதிர்வரும் 29 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. 6 மாத காலத்திற்கு பின்னர் இவ்வாறு புதிய வீதி வரைபடத்தை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நில அளவையாளர் திணைக்களத்தின் தலைமை அதிகாரி எஸ்.எச்.பீ.பீ.சங்கக்கார தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வீதி வரைபடத்தில் அதிவேக நெடுஞ்சாலை தொடர்பான தகவல்கள், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீதிகள் தொடர்பான தகவல்கள், வைத்தியசலை, பொலிஸ் நிலையங்கள் உள்ளிட்ட தகவல்களும் இடம்பெற்றிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு அமைவாக புதிய வீதி வரைபடம் வெளியிடப்படுவதன் மூலம் நாட்டுக்கு சுற்றுலாப்பயணத்துக்காக வருவோருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று அதிகாரி மேலும் தெரிவித்தார்.
Related posts:
அரியாலை மணியம் தோட்டம் பகுதியில் ஈழ மக்கள் ஜனாநயகக் கட்சியின் கட்சிக் காரியாலயம் திறந்துவைப்பு!
நாட்டில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புக்கள் !
கிளிநொச்சி மாவட்டத்தில் அரச மற்றும் கைவிடப்பட்ட காணிகளை பயிர்ச்செய்கைக்கு உட்படுத்துதல் தொடர்பில் வி...
|
|