புதிய வீடமைப்பு கடன் திட்டம் நடைமுறைக்கு – நிதியமைச்சர்!

Friday, May 24th, 2019

அடுத்தவாரம் முதல் ஸ்வீட் ஹோம் என்ற புதிய வீடமைப்பு கடன் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.

புதிதாக திருமணமான இளம் தம்பதியினருக்கு வீடொன்றை பெற்றுக் கொள்வதற்காக ஸ்வீட் ஹோம் வீடமைப்பு கடன் திட்டம் வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில் குறித்த புதிய கடன் திட்டமானது அடுத்தவாரம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் குறைந்தது 6.75 சதவீத வட்டிக்கு ஆக கூடிய தொகையாக 10 மில்லியன் ரூபாவை கடனாக பெற்று கொள்ள முடியும் என்பதுடன், இதனை இளம் தம்பதியினர் 25 வருடங்களில் திருப்பி செலுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts:


மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து  சேவையாற்றவேண்டும் -  ஈ.பி.டி.பியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலி...
கம்பரெலிய என்ற திட்டத்தை வைத்து வக்காளத்து வாங்குவது வேடிக்கையாக உள்ளது - ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரச...
சிறுமி ஹிஷாலினியின் அறையில் சிக்கிய முக்கிய சாட்சி – 40 பேரிடம் வாக்குமூலம் பெற்ப்பட்டுள்ளதாக பொலிஸ்...