புதிய விமான சேவைகளை ஆரம்பிக்க 4 நிறுவனங்கள் நடவடிக்கை!

Tuesday, July 20th, 2021

புதிய விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் 4 விமான சேவை நிறுவனங்கள் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்களை உள்ளடக்கியவாறு பயணங்களை ஆரம்பிப்பதற்கு பிரான்ஸ் விமான சேவை நிறுவனமும், மத்திய கிழக்கின் விமான சேவை நிறுவனம் ஒன்றும் இணக்கம் தெரிவித்துள்ளன.

இதேவேளை, ஓமான் விமான சேவைக்கு சொந்தமான சலாம் விமான சேவை, மத்தளை சர்வதேச விமான நிலையம் வரை  சேவையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.

அத்துடன், சினமன் விமான சேவை உள்நாட்டு விமான நிலையங்களை இணைக்கும்  வகையில் விமான சேவைகள ஆரம்பிக்க விருப்பம் தெரிவித்துள்ளது என்றுமம் அவர் தெரிவித்துதுள்ளார்.

000

Related posts: