புதிய வழிகாட்டிகளுக்கு அமைவாகவே வணிக விமான சேவைக்காக நாடு திறக்கப்படுகிறது – சுற்றுலாத்துறை அமைச்சர் அறிவிப்பு!

Sunday, January 10th, 2021

யுக்ரைனில் இருந்து நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளை அழைப்பதை நிறுத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் யுக்ரைனில் இருந்தோ அல்லது உலகில் ஏனைய நாடுகளில் இருந்தோ சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருவதை தடுக்க வேண்டுமாயின் அதனை தீர்மானிக்க வேண்டியது கொவிட் தடுப்பு குழு மற்றும் சுகாதார அதிகாரிகளே என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரத்தினபுரி மாவட்டதில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் வணிக விமான சேவைக்காக நாடு திறக்கப்படுவது புதிய வழிகாட்டிகளுக்கு அமைவாகவே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வழிகாட்டிகள் உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச விமான அமைப்பினால் சுற்றுலா பயணிகளுக்காக வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டிகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதாவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் உத்தியோகபூர்வமாக விமான நிலையங்கள் பயணிகளுக்காக திறக்கும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டிகள் தொடர்பில் தெளிவுப்படுத்துவதற்காக சுற்றுலா துறையுடன் தொடர்புபட்ட பல்வேறு பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் நாளை (11) கொழும்புக்கு அழைக்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துறையாடலில் சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்கள், சுற்றுலா துறையினர், சுற்றுலா வழிகாட்டிகள், மற்றும் சாரதிகளின் சங்க பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: