புதிய வரிகள் எதுவும் அறிவிடப்படவில்லை – நிதி அமைச்சர் பசில் தெரிவிப்பு!

நெத்தலி, உப்பு உள்ளிட்ட பல உணவுப் பொருட்களுக்கு புதிதாக வரி விதிக்கப்படவில்லை என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிதி அமைச்சு, நெத்தலி, கருவாடு, குரக்கன், உப்பு, உழுந்து, கடுகு, வெந்தயம் உள்ளிட்ட மேலும் சில பொருட்களின் வரி நீடிப்பு குறித்து நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் பிழையான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த வரிகள் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பது குறித்து மட்டுமே உள்ளதாகவும் புதிய விரிகள் அறவிடப்படவில்லை எனவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஜனநாயகத்தை பாதுகாக்கவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் - நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்று ஞாயிற்றுக்கிழமைமுதல் மீண்டும் குறைக்கப்படும் - லிட்ரோ நிறுவனம்...
நாடளாவிய ரீதியில் எச்.ஐ.வி புதிய தொற்றாளர்கள் அதிகரிப்பு - கடந்த மூன்று மாதங்களில் 695 அடையாளம் காண...
|
|