புதிய வடிவிலான தள்ளுவண்டி அறிமுகம்!

Thursday, April 20th, 2017

அவசர சிகிச்சைக்காக நோயாளர்களை நேரடியாக வார்ட்டுக்கு அனுமதிப்பதற்காக, பெகி கார் அம்பியூலன்ஸ் சேவையொன்று, முதன் முறையாக அம்பாறை வைத்தியசலையில் ​அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்னவின் ஆலோசனையின் பேரில், இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளர்களைத் தள்ளுவண்டியில் (​ட்ரொலி) வார்ட்டுக்கு அழைத்துச் செல்லும் போது வழங்கப்படும் பாதுகாப்பு வழிமுறைகள், இந்த பெகி கார் அம்பியூலன்ஸ் சேவையின் போது தேவைப்படாது என்று, அம்பாறை வைத்திய அதிகாரி டொக்டர் லங்கா திலக ஜயசிங்க தெரிவித்தார்.

அத்துடன், நோயாளர்களை மிகுந்த பாதுகாப்புடனும் வசதியுடனும், பெகி கார் அம்பியூலன்ஸில் வார்ட்டுக்கு அழைத்துச் செல்ல முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.இந்த பெகி கார் அம்பியூலன்ஸ் ஒன்று, சுமார் 2 மில்லயன் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: