புதிய முறைமையின் ஊடாக நீர் கட்டணங்களை செலுத்துவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்!
Monday, January 16th, 2023புதிய முறைமையின் ஊடாக நீர் கட்டணங்களை வழங்குவதற்கும் செலுத்துவதற்குமான வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்த நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் நாளை(செவ்வாய்கிழமை) இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் பியால் பத்மநாத தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நீர் கட்டணத்திற்கான கொடுப்பனவு பட்டியலை வழங்கும் இயந்திரம் மூலம் மாதாந்த கொடுப்பனவு தொகையை வழங்குவதுடன், வங்கி அட்டைகள் மூலம் கொடுப்பனவுகளை செலுத்தும் வாய்ப்பும் கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்படும் இந்த வேலைத்திட்டம் எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
000
Related posts:
மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 61 பேருக்கு கொரோனா உறுதி – இராணுவ தளபதி தெரிவிப்பு!
ஐம்பது தொன் பேரீச்சம் ஈச்சம் பழங்கள் சவுதி அரேபியாவால் இலங்கைக்க அன்பளிப்பு!
அரச துறையினரின் சம்பள அதிகரிப்புடன் தனியார் துறையினரின் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும் - ஜனாதிபதி...
|
|