புதிய முத்திரைகள் வெளியீடு -தபால் திணைக்களம் !

Saturday, March 17th, 2018

பௌத்த பாரம்பரியங்களுக்கு முன்னுரிமை கொடுத்து விசாக நோன்மதி தினத்தை முன்னிட்டு மூன்று புதிய முத்திரைகள் வெளியிடப்படவுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த முத்திரைகள் 10 ரூபா, 15 ரூபா, 30 ரூபா பெறுமதிகளை உடையதாக இருக்கும் என்று முத்திரை வெளியீட்டு பணியகத்தின் பணிப்பாளர் எச்.வீ.டீ.அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

மேலும் நான்கு முத்திரைகளை எதிர்வரும் 23 ஆம் திகதியும், அடுத்த மாத முற்பகுதியில் மூன்று முத்திரைகளையும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் எதிர்வரும் 23, 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் முத்திரைக் கண்காட்சி இடம்பெறவுள்ளது.

Related posts: