புதிய மின்னணு தேசிய அடையாள அட்டை – குடிமக்களின் பயோமெட்ரிக் தரவு சேகரிப்பு எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் மேற்கொள்ள திட்டம்!

Friday, January 19th, 2024

புதிய மின்னணு தேசிய அடையாள அட்டை தொடர்பான குடிமக்களின் பயோமெட்ரிக் தரவு சேகரிப்பு எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி இதனைக் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், புதிய இ-ஐடியை அமல்படுத்துவது தொடர்பான அடிப்படைப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், அதற்கான உள்கட்டமைப்புகள் தற்போது தயாராகி வருவதாகவும் அவர் கூறினார்.

குடிமக்களின் பயோமெட்ரிக் தரவுகள், கைரேகைகள் மற்றும் முகத்தை அடையாளம் காணுதல் தொடர்பான தரவுகள் சேகரிப்பு அனைத்து பிராந்திய செயலகங்கள் ஊடாக எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

000

Related posts: