புதிய மதுவரி சட்டமூலத்தை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பம் – மதுவரி திணைக்களம் அறிவிப்பு!

புதிய மதுவரி சட்டமூலத்தை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகமும் ஊடகப் பேச்சாளருமான கபில குமாரசிறி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மதுவரி கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கான பணிப்புரை மதுவரித் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பாதீட்டுக்கு அமைய இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மதுவரி கட்டளைச் சட்டத்திற்கு பதிலாக மதுவரி சட்டத்தை தயாரிப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக மதுவரித் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகமும் ஊடகப் பேச்சாளருமான கபில குமாரசிறி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வேலை நிறுத்தத்திற்கு பல சங்கங்கள் கடும் எதிர்ப்பு!
உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு சைனோபாம் தடுப்பூசி – இராணுவத் தளபதி தெரிவிப்பு!
இலங்கையில் பொதுத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
|
|