புதிய பேருந்து முன்னுரிமை பாதை திட்ட பணியில் பெண்கள் பொலிஸார் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்!
Wednesday, September 16th, 2020அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பேருந்து முன்னுரிமை பாதை திட்ட அறிவுறுத்தல்களை வீதிகளில் காட்சிப்படுத்தியபடி நிற்கும் பெண் பொலிசார் அந்த பணியில் இனி ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிற்கு புதிய வீதி ஒழுங்கு பரிச்சயமாவதற்காக பெண்பொலிஸார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
எனினும், பெண் பொலிசாரை மட்டும் அந்த பணியில் ஈடுபடுத்தியமை சமூக ஊடகங்களில் சர்ச்சையாகியதை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புதிய வீதி ஒழுங்கின்படி பேருந்து முன்னுரிமை பாதையில் பயணிக்கும்படி முச்சக்கர வண்டி, மற்றும் மோட்டார்சைக்கிள் ஓட்டுனர்களிற்கு பொலிசார் அறிவுறுதியுள்ளனர்.
மேலும் இந்த வீதி ஒழுங்கை மீறுபவர்களிற்கு 2,000 ரூபா அபராதம் விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இ.போ.ச. பேருந்து சேவை சீரின்மை - மன்னார் சாலை அதிகாரிகளின் அசமந்த போக்கு - பொதுமக்கள் கடும் விசனம்!
பொருளாதார நெருக்கடிக்கு நீண்ட கால இலக்குகளைக் கொண்ட வேலைத்திட்டங்களுடன் முன்னோக்கிச் செல்வதுஅவசியம் ...
யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள், போதைப் பொருள் விற்பனைகளை கட்டப்படுத்த விரைந்து எடுக்க வேண்டிய நடவடி...
|
|