புதிய புகையிரத கட்டணங்கள் இன்று முதல் அமுல்!

Monday, October 1st, 2018

புகையிரத கட்டணங்கள் 15 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய கட்டணங்கள் இன்று(01) முதல் அமுலுக்கு வருகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைமுறையில் உள்ள ஆரம்பக் கட்டணங்களில் மாற்றம் இல்லை என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, முதலாம் வகுப்பு ஆகக் குறைந்த கட்டணம் 40 ரூபா, இரண்டாம் வகுப்பு ஆகக் குறைந்த கட்டணம் 20 ரூபா, மற்றும் மூன்றாம் வகுப்பு ஆகக் குறைந்த கட்டணம் 10 ரூபா கட்டணங்களில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகக் குறைந்த கட்டணங்களை கவனத்திற் கொள்ளும்போது, நடைமுறையில் உள்ள 10 கிலோமீற்றருக்கு மட்டுப்படுத்தப்பட்ட திருத்தங்கள் 7ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொழும்பு கோட்டையிலிருந்து கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி மற்றும் களனி ஆகிய பகுதிகளுக்கான மூன்று வகுப்பு கட்டணங்களிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை.

இதேவேளை, யாழ்ப்பாணத்திற்கான முதலாம் வகுப்பு கட்டணம் ஆயிரத்து 40 ரூபாவிலிருந்து 1080 ரூபாவாகவும், 570 ரூபா என்ற 630 ரூபாவாகவும், 320 ரூபா என்ற மூன்றாம் வகுப்பு கட்டணம் 350 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts: