புதிய பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்!

Wednesday, May 31st, 2017

சில புதிய பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் ஜனாதிபதியின் முன்னாள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இரான் விக்ரமரத்ன, அனோமா கமகே, வசந்த சேனாநாயக்க, பாலித்த ரங்கே பண்டார, லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன, கரு பரணவிதான மற்றும் ஹர்ச டி சில்வா ஆகியோர் இவ்வாறு புதிய பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இதன்படி, இரான் விக்ரமரத்ன புதிய நிதி இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.தேசிய கொள்கை மற்றும் பொருளாதார துறை பிரதியமைச்சராக ஹர்ச டி சில்வா சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்

 

Related posts: