புதிய பிரதமரானார் தினேஸ் குணவர்த்தன – முன்னாள் அமைச்சர் நாமல் வாழ்த்து!

Friday, July 22nd, 2022

புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட தினேஸ் குணவர்தனவுக்கு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 27 ஆவது பிரதமராக தினேஸ் குணவர்த்தன அதிபர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதனையடுத்து, நாமல் ராஜபக்ச வெளியிட்ட டுவிட்டர் பதிவிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து நீங்கள் எங்கள் தேசத்திற்கு ஸ்திரத்தன்மையையும் செழிப்பையும் கொண்டு வர முடியும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” எனவும் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டார்.

000

Related posts: