புதிய பாதீட்டின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் இன்று!

Wednesday, March 6th, 2019

இந்த ஆண்டுக்கான பாதீட்டின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் இன்றுமுதல் இடம்பெறவுள்ளது.

இந்த விவாதம் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை 6 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. அந்த விவாதம் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதனையடுத்து பாதீடு மூன்றாம் வாசிப்பு எனப்படும் பாதீடு குழுநிலை விவாதம் எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் 19 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.

அந்த விவாதம் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதேவேளை , 2019 ஆம் நிதியாண்டின் வரவு செலவு திட்ட யோசனைக்கு அமைய வெகன் ஆர் (Wagon R) சிற்றூர்தியின் விலை 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts: