புதிய பரீட்சை ஆணையாளர் நாயகமாக கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் எல்.எம்.டி தர்மசேன நியமனம்!
Friday, November 26th, 2021புதிய பரீட்சை ஆணையாளர் நாயகமாக கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் எல்.எம்.டி தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பதவியில் பணியாற்றிய பீ. சனத் பூஜித இன்று 26 ஓய்வு பெறுவதை முன்னிட்டு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, அடுத்த வாரம் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக திரு.எல்.எம்.டி.தர்மசேன கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளார்.
சனத் பூஜித 2017 ஆண்டு நவம்பர் மாதம் முதல் பரீட்சை ஆணையாளர் நாயகமாக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இலங்கை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பதவியிலிருந்து சனத் பீ புஜித ஓய்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
திங்கட்கிழமை மாறுகின்றதாம் அமைச்சரவை மாற்றப்படுகிரர்கள் முக்கிய அமைச்சர்கள்
மருந்துவ பொருட்களுக்காக நிதியமைச்சினால் 20 மில்லியன் டொலர் வழங்கப்பட்டது - எதிர்வரும் 3 மாதங்களுக்கு...
சிங்கப்பூரின் ஒன்பதாவது ஜனாதிபதியாக தர்மன் சண்முகரத்தினம் நாளை பதவியேற்பு!
|
|