புதிய நேர அட்டவணையில் இயங்கும் நயினாதீவு – குறிகட்டுவான் படகு சேவை !
Sunday, June 2nd, 2024நயினாதீவு குறிகட்டுவான் படகு சேவை இன்று சனிக்கிழமை தொடக்கம் புதிய நேர அட்டவணையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்புடனான நேர அட்டவணையை வேலணை பிரதேச சபை நயினாதீவு உப அலுவலகத்தின் பொறுப்பதிகாரி வெளியிட்டுள்ளார்.
நயினாதீவு – குறிகட்டுவான் இடையேயான படகுச் சேவை காலை 6.30 முதல் மாலை 5.30 மணிவரை ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் ஒரு படகு புறப்படும்.
மற்றும் குறிகட்டுவான் – நயினாதீவு இடையேயான படகுச் சேவை காலை 7 மணி முதல் மாலை 6.30 மணிவரை ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் ஒரு படகு புறப்படும் என கூறப்பட்டுள்ளது.
நயினாதீவு நாகபூஷணி அம்பாளின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வீதிப் போக்குவரத்து விதி மீறல் குறித்த அபராதத் தொகையில் மாற்றமில்லை - நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க!
சிவனை நினைந்து பெறும் ஆன்மீக பலமானது, ஒட்டுமொத்த நாட்டிற்கே கிடைக்கும் ஆசீர்வாதமாகவே கருதுகின்றேன் ஜ...
அதிகார பரவலாக்கம் தொடர்பில் தென்பகுதி மக்கள் தேவையற்ற பயத்தில் உள்ளனர் - தேர்தல் ஆணைக்குழுவின் முன்...
|
|