புதிய நியமனம் பெற்ற தாதியர்களுக்கு நடவடிக்கை!

Sunday, April 30th, 2017

சுகாதார அமைச்சியினால் மேற்கொள்ளப்பட்ட இடமாற்ற உத்தரவு மற்றும் புதிய நியமனங்களின் அடிப்படையில் பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட தாதியர்கள் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண சுகாதார அமைச்சின் மாநாட்டில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.காதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேரத்னவின் தலைமையில் மாகாண சுகாதார அமைச்சர்களின் மாநாடு நாரேஹன்பிட்டியில் உள்ள தேசிய இரத்த வங்கி மத்திய நிலைய கட்டடத்தில் நடைபெற்றது. இதன்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கமைவாக இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாத அதிகாரிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் இங்கு தெரிவித்தார்.இதற்கான ஆலோசனையையும் அமைச்சர் டொக்டர் ராஜித சேனரத்ன, சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு வழங்கினார். இடமாற்ற உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டதற்கான அறிக்கையொன்றை அனைத்து வைத்தியசாலை அதிகாரிகளும், சுகாதார அமைச்சுக்கு சமர்ப்பிக்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது ஆண், பெண் தாதியர்களுக்கான இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்று மாகாண சுகாதார அமைச்சர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்

Related posts: