புதிய நியமனப் பட்டியலில் வெளிவாரிப் பட்டதாரிகள் இல்லை!

Tuesday, July 23rd, 2019

நாடு முழுவதும் 16 ஆயிரம் பட்டதாரிகளை உள்வாங்கும் நோக்கில் எதிர்வரும் 29ம் , 30ம் திகதிகளில் வழங்கப்படவுள்ள புதிய நியமனத்திற்காக பட்டதாரிகளின் பெயர்ப் பட்டியல்கள் மாவட்டச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிதாக ஆட்சேர்ப்புச் செய்யப்படவுள்ள பட்டதாரிகளில் வெளிவாரிப் பட்டதாரிகள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அந்தவகையில் மாவட்டச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பட்டியலில் எந்தவொரு வெளிவாரிப் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்த பட்டதாரிகளும் உள்வாங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: