புதிய நாணயங்கள் வெளியீடு!

Thursday, March 29th, 2018

இலங்கையில் அண்மையில் புதிதாக 2000, 1500, 500 ரூபா நாணய குற்றிகள் வெளியிடப்பட்டமை தொடர்பில் மத்திய வங்கி உத்தியோகபூர்வ இணைத்தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் முதன்முறையாக பெரிய தொகையில் வெளியான நாணய குற்றிகள் தொடர்பில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

2550 வருடங்களை பௌத்த மதம் பூர்த்தி செய்வதை நினைவு கூரும் வகையில் இந்த நாணய குற்றிகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை “பனி மலை” சின்னத்திலான வெள்ளி உலோகத்தில்தயாரிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியினால் பல்வேறு பாரம்பரிய விடயங்களை நினைவு கூரும் வகையில் நாணயத்தாள் மற்றும் நாணயக் குற்றிகள் வெளியிடுவது வழக்கமான விடயமாகும்.

அதற்கமைய 1957ஆம் ஆண்டு முதல் முறையாக நாணய குற்றி ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Related posts: